/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேல் - ஈரான் குண்டுமழை; மத்திய கிழக்கில் அமைதியின்மை US forces will attack| trump warns iran|
இஸ்ரேல் - ஈரான் குண்டுமழை; மத்திய கிழக்கில் அமைதியின்மை US forces will attack| trump warns iran|
இதுவரை பார்க்காத வகையில் இறங்கி வந்து அடிப்போம்! ஈரானை எச்சரித்த அதிபர் டிரம்ப் இஸ்ரேல் - ஈரான் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் ஓயாமல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளங்களை உள்ளிட்டவற்றை இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஈரானின் தெற்கு புஷெர் மாகாணத்தில் இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் இரண்டு முக்கிய எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன. ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆரம்பத்தில் இருந்து அமெரிக்கா கூறி வருகிறது.
ஜூன் 15, 2025