/ தினமலர் டிவி
/ பொது
/ வல்லரசுகளை மிரளவிட்ட இந்தியாவின் தரமான சம்பவம் isro gaganyaan | air drop test video | space science
வல்லரசுகளை மிரளவிட்ட இந்தியாவின் தரமான சம்பவம் isro gaganyaan | air drop test video | space science
உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும் தான் இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறது. இந்த பட்டியலில் 4வது நாடாக இந்தியாவும் இடம் பிடிக்க போகிறது. இதற்காக தான் ககன்யான் என்ற திட்டத்தை நம் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கி இருக்கிறது. முதல் கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மனிதர்கள் இல்லாத விண்கலத்தை விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கிறது. அதில் மனிதர்களுக்கு பதிலாக Vyommitra என்ற ரோபோ பறக்கிறது. அடுத்த ஆண்டும் ரோபோவே விண்வெளிக்கு செல்லும்.
ஆக 24, 2025