காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குநர்
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி. சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார். குவாரிகள் தொடர்பாக போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தார். சட்டவிரோத குவாரிகள் பற்றி புகார் அளித்ததால் ஜெகபர் அலியை லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெகபர் அலியின் மனைவி மரியம், சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளிடம் இருந்து ஏற்கனவே ஜெகபர் அலிக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் வழக்குப்பதிய தயக்கம் காட்டினர்.
ஜன 30, 2025