உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / RTI போட்டு அதிகாரிகளை அலறவிட்ட மக்கள் | Jal Jeevan Mission | Thiruvarur

RTI போட்டு அதிகாரிகளை அலறவிட்ட மக்கள் | Jal Jeevan Mission | Thiruvarur

ஒத்த ரூபா கூட கண்ணுல காட்டல சார் மத்திய அரசு நிதியை அமுக்கிட்டாங்க ஒரு கிராமத்துக்கே பொய் கணக்கு? திருவாரூர் மாவட்டம் அகர திருமாளம் ஊராட்சியின் கீழ் ஐந்து கிராமங்கள் உள்ளன. இங்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு திட்டமே கிராமத்துக்கு வரவில்லை என மக்கள் புலம்பினர். இது குறித்து வினோத்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து முறையான தகவல் எதுவும் வரவில்லை. நேராக தமிழக தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்து தகவல்களை பெற்றார். அப்போது அகர திருமாளம் ஊராட்சியில் சோக் பிட் எனப்படும் மத்திய அரசின் திட்டம் 138 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வீடு ஒன்றுக்கு 7900 ரூபாய் என 138 வீடுகளுக்கு மொத்தம் பத்து லட்சத்துக்கு 74 ஆயிரத்து நானூறு ரூபாய் செலவு செய்யப்பட்டு கடந்த 2019ல் இந்த பணிகள் முடிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆனால்அது போன்று எந்த திட்டமும் தங்கள் வீடுகளில் செயல்படுத்தவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 1373 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 26 லட்சத்து 66 ஆயிரத்து 400 ரூபாய் என்றும், இதற்கான பணிகள் 2023ல் முடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் பயனாளிகள் என ஒரே வீட்டைச் சேர்ந்த மூன்று அல்லது நான்கு நபர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இறந்து போன நபர்களின் பெயரிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமானது. இதுபோல பல திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகர திருமாளம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !