உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலெக்டரிடம் கதறி அழுத குடும்பம் Tirunelveli Robbers shooting Nellai teenager killed

கலெக்டரிடம் கதறி அழுத குடும்பம் Tirunelveli Robbers shooting Nellai teenager killed

தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் சுபாஷ் அமிர்தராஜ். இவர் ஜமைக்கா நாட்டில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். அவரது கடையில் திருநெல்வேலியை சேர்ந்த விக்னேஷ், சுடலைமணி மற்றும் ராஜாமணி வேலை பார்க்கின்றனர். சம்பவத்தன்று கொள்ளையர்கள் சுபாஷ் அமிர்தராஜ் கடைக்குள் நுழைந்து பணம், பொருட்களை கொள்ளையடித்தனர். தடுக்க வந்த கடை ஊழியர்களை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் விக்னேஷ் வயது 35 குண்டடி பட்டு ஸ்பாட்டிலேயே பலியானார். விக்னேஷ் பெற்றோர் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப்புடன் சென்று கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்தனர். மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி