புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை | Japan devotees | Rameswaram
ஜப்பான் டோக்கியோவில் இருந்து பால குங்கோ குருமணியின் தலைமையில் 23 ஜப்பான் பக்தர்கள் இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுலா வந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். இன்று ராமேஸ்வரம் வந்த இவர்கள் புண்ணிய தீர்த்த கிணறுகள் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி சுதர்சன ஹோமம் நடத்தினர். Breath பின் ஐந்து கலசங்களில் எடுக்கப்பட்ட புனித நீரை ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஜப்பானில் இருந்து இதுவரை வந்துள்ள 120 பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மிக பழமை வாய்ந்த முக்கிய கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 50க்கும் அதிகமான கோயில்களில் தரிசனம் செய்திருப்பதாக ஜப்பான் பக்தர் குழு தலைவர் கூறி உள்ளார்.