உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெயலலிதாவின் சொத்து இனி யாருக்கு? வெளியானது தீர்ப்பு | Jayalalithaa | Jayalalithaa Asset | Jayalalit

ஜெயலலிதாவின் சொத்து இனி யாருக்கு? வெளியானது தீர்ப்பு | Jayalalithaa | Jayalalithaa Asset | Jayalalit

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பெங்களூரு சிபிஐ ஸ்பெஷல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன. ஜெயலலிதாவுக்கு சொந்தமான 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 விலை உயர்ந்த வாட்ச், 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக அரசிடம் உள்ள சுமார் 27 கிலோ தங்க வைர நகைகளை ஏலம் விட உத்தரவிடுமாறு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நகைகளை ஏலம் விடுவதற்கு பதில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடகா கோர்ட் உத்தரவிட்டது. நகைகளை பெற்று செல்ல தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். நகைகளை அவர்கள் பெற்றுச் செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோகிராபர்கள் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் போடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை கடந்த ஆண்டு மார்ச் 6, 7 தேதிகளில் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை