உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தது என்ன? வரும் 27ம்தேதி தெரியும் Jayam Ravi divorce case Aarti Ravi chennai family court jaya

அடுத்தது என்ன? வரும் 27ம்தேதி தெரியும் Jayam Ravi divorce case Aarti Ravi chennai family court jaya

பிரபல டிவி தொடர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து 2009ல் நடிகர் ஜெயம்ரவி திருமணம் செய்தார். ஆரவ், அயான் என 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக கடந்த செப்டம்பரில் ஜெயம் ரவி அறிவித்தார். ஆனால் தான் சேர்ந்து வாழவே விரும்புவதாக ஆர்த்தி கூறினார். ஜெயம்ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவால் தானும், 2 குழந்தைகளும் கஷ்டப்படுவதாக ஆர்த்தி வேதனையுடன் கூறினார். இந்நிலையில், விவாகரத்து கோரி ஜெயம்ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று சென்னை 3வது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜெயம் ரவி கோர்ட்டில் ஆஜரானார். ஆர்த்தி காணொலி மூலம் ஆஜரானார். நீதிபதி தேன்மொழி வழக்கை விசாரித்தார். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்னை பற்றி குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இருவரும் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு வந்தது. ஜெயம் ரவி ஆஜரானார். ஆர்த்தியும் சமரச மையத்துக்கு வந்தார்.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி