25 வாகனங்களை இடித்து நொறுக்கி வெறிச்செயல்! JCB | Minor Driver | Drunk and Drive | Madurai
சாலையில் நின்ற வாகனங்கள் அனைத்தும் பீஸ் பீஸ்! ஜேசிபியால் சம்பவம் செய்த சிறுவன்! மதுரை செல்லூர் பகுதியில் நள்ளிரவில் ஜேசிபி வாகனம் ஒன்று தாறுமாறாக ஓடியது. இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, சரக்கு வாகனம், பைக் என அனைத்து வாகனத்தையும் இடித்து தள்ளியது. இதில் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த கடை ஒன்றையும் ஜேசிபி இடித்து தள்ளியது. அங்கு இருந்த மரத்தை சாய்த்து. சாலையோரத்தில் இருந்த கடைகள், வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து ஜேசிபி மோதியது. கட்டடங்கள், மரம், பேரிகார்டுகள் என சாலை இருந்த அனைத்தையும் JCB கபளீகரம் செய்தது. அதிர்ச்சி அடைந்த மக்கள் ஜேசிபி வாகனத்தை இப்படி தாறுமாறாக இயக்குவது யார் என துரத்தி சென்று பார்த்தனர். 17 வயது சிறுவன் ஒருவன் போதையில் கண் மண் தெரியாமல் இப்படி மூர்க்கதனமாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அவனை பிடித்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் சண்டையிண்ட சிறுவன் ஜேசிபியை எடுத்து வந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.