உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்க துணை அதிபருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு JD Vance met Modi at Delhi| Vance welco

அமெரிக்க துணை அதிபருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு JD Vance met Modi at Delhi| Vance welco

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலை டில்லி வந்தடைந்த வான்சுக்கு, ஏர்போர்ட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்ஸ் மனைவி உஷா, மகன்கள் இவான், விவேக் மற்றும் மகள் மிராபெல் ஆகியாேரும் வான்சுடன் இந்தியா வந்தனர். வான்ஸ்சின் குழந்தைகள், இந்திய பாரம்பரிய உடையான குர்தா பைஜாமா, அனார்கலி ஸ்கர்ட் அணிந்திருந்தனர். இந்தியா வந்ததும் முதல் வேலையாக குடும்பத்துடன் டில்லியில் உள்ள அக் ஷர்தாம் கோயிலுக்கு சென்ற வான்ஸ், சாமி தரிசனம் செய்தனர். மிக நேர்த்தியாக, பிரமாண்டமாக கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கோயிலை தன் குழந்தைகள் மிகவும் ரசித்ததாகவும் கூறிய வான்ஸ், இந்தியாவில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி என்றார்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை