நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார் கனடா அதிபர் | Justin Trudeau
கனடாவில் 2021ல் நடந்த தேர்தலில் சீக்கியர்களின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று பிரதமர் ஆனார். 2023ல் காலிஸ்தான் தலைவன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டபோது, இந்தியா மீது பழி போட்டார் ட்ரூடோ. இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. இந்தியாவை தொடர்ந்து பகைத்து கொண்டதால், ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் செல்வாக்கை இழந்ததால், கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ட்ரூடோ அறிவித்தார். புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மைக் கார்னி விரைவில் கனடா பிரதமராக பதவியேற்க உள்ளார். அவரை சந்தித்து ஆலோசித்த ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து கூறினார். பதவிக்காலம் முடிவதால், கனடா பார்லிமென்ட்டான ஹவுஸ் ஆப் காமன்ஸ்ல் இருந்து தமது நாற்காலியை தூக்கிகொண்டு வெளியேறினார். நாற்காலியுடன் வேடிக்கையாக நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு வெளியேறும் ட்ரூடோவின் போட்டோ வைரல் ஆனது.