வக்பு மசோதா பின்னணியை விளக்குகிறார் ஜே.வி.ஸ்ரீராம் J.V. Sriram | psephologist |Thiruchendurai villa
மத்திய அரசு வக்பு திருத்த மசோதாவை கொண்டு வர அடிப்படை காரணமாக இருந்தது திருச்சியில் உள்ள திருச்செந்துறை கிராமம். இந்த கிராமம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்றும், நிலத்தை வாங்கவோ விற்கவோ முயற்சிக்கும் முன்பு, தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் தமிழக வக்பு வாரியம் தெரிவித்தது. இது பற்றி, இக்கிராமத்தை சேர்ந்த தேர்தல் கருத்து கணிப்பாளர் ஜே.வி. ஸ்ரீராம் ஆய்வு செய்தார். அவர் எடுத்த முயற்சிகளின் விளைவாக மத்திய அரசு வக்பு சட்டம் 1995ல் திருத்தங்கள் கொண்டு வந்து, மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தின் ஒரு கிராமம் நாடு முழுவதும் உள்ள ஒரு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள எப்படி காரணமாக இருந்தது பற்றி சொல்கிறார் ஜே.வி ஸ்ரீராம்.