/ தினமலர் டிவி
/ பொது
/ நகராட்சி தலைவருக்கு நாய் பொம்மை தந்த பாஜ கவுன்சிலர்கள் | Kadayanallur stray dog attacks
நகராட்சி தலைவருக்கு நாய் பொம்மை தந்த பாஜ கவுன்சிலர்கள் | Kadayanallur stray dog attacks
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர் பகுதியில் தெரு நாய் தொல்லைகள் அதிகரித்துள்ளது. இரவு மட்டுமில்லாமல், பகலிலும் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடமாக சுற்றித் திரிகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 48 பேரை தெருநாய் கடித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பகல் நேரத்திலும் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அக் 15, 2025