துணை அதிபர் கமலா ஹாரிஸை கொண்டாடும் தமிழக கிராமம் | Kamala Haris | Vice president of America
அமெரிக்காவில் பேசப்படும் தமிழகத்தின் துளசேந்திரபுரம் டிஸ்க் - 2020-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஜோபைடன் அதிபர் ஆனார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் ஆனார். வரும் நவம்பரில் மீண்டும் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதற்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தற்போதைய அதிபர் பைடன் திடீரென போட்டியில் இருந்து விலகினார். அத்துடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்தார். கமலா ஹாரிஸ் வேட்பாளர் ஆவார் என்றே பலரும் பேசி வருகின்றனர். அவர் துணை அதிபராக பொறுப்பேற்ற போதே, அவருக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் பேசப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் கமலா பேசு பொருள் ஆனார். திருவாரூர் மாவட்டம், துளசேந்திரபுரம் கிராமத்தில் தான் கமலாவின் அம்மா வழியில் வந்த தாத்தா-பாட்டி வசித்தனர்.