ஐந்தே வருடத்தில் டபுள்: கமல் சொத்து மதிப்பு இவ்வளவா? | Kamal | Kamal haasan Asset
தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜூன் 6ம் தேதி பகல் 12.30க்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கமல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுவில் கமல் குறிப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கமல் தன்னிடம் அசையும் சொத்தாக 59 கோடியே 69 லட்சம் இருப்பதாகவும், அசையா சொத்தாக 245 கோடியே 86 லட்ச ரூபாயும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடனாக 49 கோடியே 67 லட்ச ரூபாய் இருக்கிறதாம். 2023 மற்றும் 2024ம் ஆண்டில் தாக்கல் செய்த வருமான வரிப்படி அவரது வருமானம் 78 கோடியே 90 லட்சமாக இருந்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் 2, உத்தண்டியில் ஒன்று, சோழிங்கநல்லூரில் ஒன்று என மொத்தம் 4 கமர்ஷியல் பில்டிங் அவருக்கு உள்ளது.