உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை

#ChennaiRain #TNRain #KanchipuramRain #TiruvallurRain #Trafficjam #HeavyRain தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வட சென்னையின் பல்வேறு பகுதிகள் என மாநகர் முழுதும் மதியம் பலத்த மழை பெய்தது. மாலையும் மழை தொடர்ந்ததால், அலுவலகங்களுக்கு சென்றோர் வீடு திரும்புகையில் சிரமப்பட்டனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாகக் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. மேட்டுத்தெரு, பழைய ரயில்வே சாலை, அம்பேத்கர் சிலை சந்திப்பு, சுங்குவார்சத்திரம் நடுத்தெரு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது. காஞ்சிபுரத்தில் 4 மணி நேரத்தில் 6 செமீ மழை பதிவானது. உத்தரமேரூரில், மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் 13 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்குள் பெய்த அதீத கனமழையால், உத்தரமேரூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பூண்டி, காக்களூர், மணவாளநகர், கடம்பத்தூர் , ஈக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால், சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் துவக்கமே சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் நல்ல மழைப்பொழிவை தந்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் இம்முறை விரைவில் நிரம்பும் என, மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அக் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை