விருது, பணத்தை ஓனர் திருடியதாக சொல்கிறார் கஞ்சா கருப்பு kanja karuppu| complaint on actor kanja ka
சினிமா காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, மதுரவாயில், கிருஷ்ணா நகரில் ரமேஷ் என்பவரின் வீட்டை, 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போதெல்லாம் இந்த வீட்டில் தங்குவாராம். இச்சூழலில், வீட்டு ஓனர் ரமேஷ் மதுரவாயில் போலீசில் கஞ்சா கருப்பு மீது புகார் அளித்துள்ளார். 3 ஆண்டுகளாக கஞ்சாக கருப்பு என் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார். பல மாதங்களாக அவர் வாடகை தருவதில்லை. இதுவரை 3 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார். என் வீட்டை வேறொருவருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளார். மது குடிப்பது உள்ளிட்ட தகாத செயல்கள் வீட்டில் நடக்கிறது. வீட்டை லாட்ஜ் போல மாற்றி விட்டார் என புகாரில் கூறியுள்ளார். போலீசார் விசாரித்து வரும் நிலையில், வாடகை பணத்தை கொடுத்து விட்டதாக கஞ்சா கருப்பு தெரிவித்தார்.