பள்ளிக்குள் நுழைந்து தகராறு: HMமிடம் அத்துமீறிய இளம்பெண் | young woman slapped headmaster
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கு சம்பவத்தன்று காலை ஒரு இளம் பெண் வந்தார். எனது குழந்தை இந்த பள்ளியில்தான் படிக்கிறது என்றார். குழந்தையின் பெயரை சொல்லி அவளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றார். தகவலறிந்து வந்த தலைமை ஆசிரியர் குழந்தையை பார்க்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். குழந்தையின் தந்தை அந்த குழந்தையை பள்ளியில் சேர்த்த போதே, என் குழந்தையை யார் பார்க்க வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என கூறியிருக்கிறார் என எச்.எம். ஜான் கிறிஸ்டோபர் அந்த பெண்ணிடம் சொன்னார். குழந்தையின் அப்பா அனுமதித்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் எனவும் எச்.எம் கூறியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார்.