/ தினமலர் டிவி
/ பொது
/ வீட்டோட மாப்பிள்ளையால் வந்த வினை: பகீர் சம்பவம் | Kanyakumari | Police | Husband Arrest
வீட்டோட மாப்பிள்ளையால் வந்த வினை: பகீர் சம்பவம் | Kanyakumari | Police | Husband Arrest
கன்னியாகுமரி மத்திகோடு பாலப்பள்ளத்தை சேர்ந்தவர் டார்வின், வயது 46. இவரது மனைவி பவிதா, வயது 39. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பவிதா வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். திருமணம் ஆனதில் இருந்தே டார்வின் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தார். ஆரம்பத்தில் நன்றாக இருந்த இந்த வாழ்க்கை போக போக கசந்துள்ளது. தனக்கு மாமியார் வீட்டில் மரியாதை இல்லை என்பதை டார்வின் உணர்ந்தார். இது குறித்து மனைவியிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வீட்டில் யாரும் இல்லை. குழந்தைகள் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
ஜூன் 29, 2025