உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் டாக்டர் சம்பவத்தில் வீடியோவால் பூகம்பம் | kolkata woman doctor case | Kapil Sibal viral video

பெண் டாக்டர் சம்பவத்தில் வீடியோவால் பூகம்பம் | kolkata woman doctor case | Kapil Sibal viral video

பெண் டாக்டர் வழக்கில் பூகம்பம் கோர்ட்டில் சிரித்தாரா கபில் சிபல் அதிர வைத்த வைரல் வீடியோ கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பற்றி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கொடூரன் சஞ்சய் ராய் மற்றும் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ், போலீஸ் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரை கைது செய்தது. இன்னொரு பக்கம் இந்த கொடூர சம்பவம் பற்றி தாமாக வழக்கு பதிவு செய்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும் போதும் கோர்ட்டில் நடக்கும் விஷயங்கள் நேரடியாக லைவ் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது பல முக்கிய உத்தரவுகளை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பிறப்பித்தார். இந்த நிலையில் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் கபில் சிபல், வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்று கொதித்து எழுந்தார். அதாவது, ஆகஸ்ட் 22ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் வைக்கும் போது, யாரோ ஒருத்தர் சிரிக்கிறார் என்று குற்றம் சாட்டினார். நேரடி ஒளிபரப்பில் இருந்து இந்த காட்சியை எடுத்து சிலர் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கினர். இவ்வளவு கொடூரமான வழக்கு விசாரணையின் போது மூத்த வக்கீல் கபில் சிபல் சிரித்துக்கொண்டு இருக்கிறார். அவரால் இதை செய்ய எப்படி முடிகிறது? என்று சிலர் பரப்பி விட்டனர். இதற்கு தான் லைவ் செய்வதை நிறுத்த வேண்டும் என்று நேற்று கபில் சிபல் கொந்தளித்தார். இது பற்றி அவர் கோர்ட்டில் கூறியது: நான் எங்கே சிரித்தேன். ஒரு போதும் நான் சிரிக்கவில்லை. என்ன வழக்கு நடக்கிறது என்று தெரியும். எப்படி சிரிப்பேன். தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். இதனால் எனக்கும் எனது வக்கீல் குழுவினருக்கும் கொலை மிரட்டல் வருகிறது.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை