உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன | kappalur toll gate Issue

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன | kappalur toll gate Issue

கப்பலூர் சுங்கச்சாவடி வசூல் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு! உள்ளூர் மக்கள் நிம்மதி மதுரை திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிகளை மீறி நகராட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதை அகற்ற கோரி பல ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதை எதிர்த்து உள்ளூர் வணிகர்கள், தொழிற்பேட்டை நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. கலெக்டர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்றனர். இதில், தற்காலிகமாக உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் பழைய நடைமுறையே தொடர முடிவெடுக்கப்பட்டது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ