/ தினமலர் டிவி
/ பொது
/ முற்றுகையால் டோல்கேட்டில் முடங்கிய போக்குவரத்து | Kappalur tollgate | ADMK protest
முற்றுகையால் டோல்கேட்டில் முடங்கிய போக்குவரத்து | Kappalur tollgate | ADMK protest
மதுரை திருமங்கலம் வழியாக திண்டுக்கல்-கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இதில் திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கப்பலூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதை விதிமுறைக்கு புறம்பாக அமைத்ததோடு, உள்ளூர் வாகனங்களுக்கு டோல் கட்டணம் கேட்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி 12 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
ஜூலை 10, 2024