மோதலில் முடிந்த காரைக்குடி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் | Karaikudi corporation | First meeti
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. 27வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரகாஷ் பேசும்போது, கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி சார்பில் 80 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு 350 ரூபாய் சம்பளம் வழங்கிவிட்டு 702 ரூபாய் கணக்கு காட்டி 3 மாதத்தில் 48 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் கேட்டார். அப்போது 13வது வார்டு திமுக கவுன்சிலர் சித்திக் எதிர் கேள்வி கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மாமன்ற கூட்டம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஒருவரை ஒருவர் போடா வாடா என ஒருமையில் திட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கூட்டத்தில் இருந்த சக உறுப்பினர்கள் விலக்கி விட்டனர்.