உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானுக்கு எதிராக கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேச்சு Pakistan |Suicide Bomb |Karnataka Minister |

பாகிஸ்தானுக்கு எதிராக கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேச்சு Pakistan |Suicide Bomb |Karnataka Minister |

ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 டூரிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது. படைகளை தயார்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் வீட்டு வசதி மற்றும் சிறுபான்மையின அமைச்சராக இருக்கும் ஜமீர் அகமது தான் Zameer Ahmed Khan தற்கொலை படையாக பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாதிகளை தாக்குவேன் என ஆவேசமாக கூறி உள்ளார். நாங்கள் இந்தியர்கள். இந்துஸ்தானிகள். எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரியாக இருந்து வருகிறது. அவர்களுக்கு எதிராக போருக்கு செல்ல வேண்டி இருந்தால், நான் போராட தயாராக இருக்கிறேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அனுமதி தந்தால், உடலில் குண்டுகளுடன் தற்கொலை படையாக பாகிஸ்தான் சென்று தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு இந்தியனும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஒன்றுபட வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜமீர்அகமது கான் கூறினார். பாகிஸ்தானுடன் போரை ஆதரிக்கவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி சர்ச்சையான நிலையில், அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் தற்கொலை படையாக செல்வேன் என கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை