உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீரில் மீண்டும் அட்டாக்: உளவுத்துறை முக்கிய அலர்ட் | kashmir pahalgam attack | india vs pakistan

காஷ்மீரில் மீண்டும் அட்டாக்: உளவுத்துறை முக்கிய அலர்ட் | kashmir pahalgam attack | india vs pakistan

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை வேட்டையாடும் ஆப்ரேஷன் தீவிரமாக நடந்து வருகிறது. சம்பவம் நடந்ததுமே காஷ்மீர் சுற்றுலாவுக்கு புக் செய்து வைத்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை அவசர அவசரமாக ரத்து செய்து இருந்தனர். அடுத்த சில நாட்களில் மீண்டும் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் தலை காட்ட ஆரம்பித்தனர். இந்த நிலையில் நம் உளவுத்துறைக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் இன்னும் ஆக்டிவாக இருப்பதும்; அவர்கள் கொடிய தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக காஷ்மீரில் உள்ள முக்கியமான 87 சுற்றுலாத்தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி உளவுத்துறை வட்டாரம் கூறியது: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள இன்பார்மர்கள் மற்றும் உளவு அமைப்புகளிடம் இருந்து இது பற்றி நம்பகமான தகவல் வந்துள்ளது. அதன்படி, ஆக்டிவாக இருக்கும் ஸ்லீப்பர் செல்கள், உள்ளூர்வாசிகள் அல்லாதவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தக்கூடும். குறிப்பாக ஸ்ரீநகர், கந்தர்பால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர், உளவு அமைப்பினர், சுற்றுலா பயணிகள், பண்டிட்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தலாம். எனவே தான் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன என்று உளவுத்துறை வட்டாரம் கூறின. அதே போல் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு பதிலடியாக மிகவும் தீவிரமான தாக்குதலை நடத்த சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கை சொல்கிறது. குறிப்பாக ரயில்வே கட்டமைப்புகள், ரயில்வே ஊழியர்களை குறி வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரில் இன்னொரு அட்டாக் நடந்து விடக்கூடாது என்பதில் நம் பாதுகாப்பு படை தீவிரமாக உள்ளது. இதனால் தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ