உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாய்கால் தூர்வாரததால் பெரும்பகுதி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார்! Kaveri River | Mettur Dam

வாய்கால் தூர்வாரததால் பெரும்பகுதி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார்! Kaveri River | Mettur Dam

நடந்தாய் வாழி காவேரி! பிரம்மிக்க வைக்கும் கல்லணை காட்சிகள்! தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குவது காவிரி ஆறு. கர்நாடகாவில் பிறக்கும் காவிரி ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது. காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது. அந்த நீர் சில தினங்களில் திருச்சி அருகே உள்ள கல்லணைக்கு வந்தது. கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூன் 15ம் தேதி நீர் திறக்கப்பட்டது. கரிகால் சோழனால் 1ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை, ஒரு பொறியியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும், களி மண்ணும் கொண்டு கட்டப்பட்டது கல்லணை. இதன் நீளம் 1080 அடி. அகலம் 66 அடி. அணையின் உயரம் 18 அடி. 1853ல் கல்லணையை பார்த்த பிரிட்டீஷ் இன்ஜினியர் ஸ்மித், இந்த அணை ஒரு பொறியியல் சாதனை என வியந்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, காவிரி நீரை டெல்டா மாவட்டத்துக்கு பிரித்து வழங்கும் பணியை செய்கிறது. கல்லணை காவிரி ஆற்றில் 40 ஷட்டர்களும், கொள்ளிடம் ஆற்றில் 30 ஷட்டர்களும், வெண்ணாற்றில் 33 ஷட்டர்களும், கல்லணை கால்வாயில் ஆறு ஷட்டர்களும், மணல் போக்கியில் ஐந்து ஷட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக காவிரி ஆற்றின் இடதுகரையில் கோவிலடி வாய்க்கால், வலது கரையில் பிள்ளை வாய்க்கால் என இரண்டு ஷட்டர்கள் உள்ளன. கல்லணை மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் தற்போது 119.60 அடி நீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. திருச்சி முக்கொம்புக்கு வரும் அந்த நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த நீர் அப்படியே கல்லணைக்கு வருவதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. கல்லணையில் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் பார்ப்பவரை சிலிர்க்க வைக்கிறது. காவிரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நீர் வருவதால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளன.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !