நெல்லை கோர்ட்டில் அழுதுகொண்டே ஆஜரான கொலையாளி சுர்ஜித் | Kavin case | Sujith appears in court |
தூத்துக்குடி ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் கவின். வயது 27. ஜூலை 27ல் நெல்லை கே.டி.சி நகரில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் எஸ்ஐ தம்பதிகளான சரவணன்- கிருஷ்ண குமாரியின் மகன் சுர்ஜித்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தனது சகோதரியை கவின் காதலித்தது பிடிக்காததால் அவரை சுர்ஜித் கொலை செய்தது தெரிந்தது. சுர்ஜித்தை கைது செய்த பாளையங்கோட்டை போலீசார், அவருக்கு தூண்டுதலாக செயல்பட்டதாக கூறி அவரது தந்தை சரவணனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயார் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்கு பதிவு செய்து தேடுகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் உலக ராணி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.