உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அனைத்து மக்களுக்கும் உரிய அங்கீகரம் வழங்கப்படும் | Keir Starmer | Labour Party

அனைத்து மக்களுக்கும் உரிய அங்கீகரம் வழங்கப்படும் | Keir Starmer | Labour Party

பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 412 இடங்களை வென்று 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றது. பிரதமராக இருந்த ரிஷி சுனக் பதவியை ராஜினாமா செய்தார். தொழிலாளர் கட்சி பிரதமர் வேட்பாளர் கெயர் ஸ்டார்மரை ஆட்சி அமைக்க வருமாறு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றார் ஸ்டார்மர். பிரிட்டனின் புதிய பிரதமராக அவரை மன்னர் சார்லஸ் நியமித்தார். பிரிட்டன் பிரதமராக நாட்டு மக்களுக்கு முதல் உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு நன்றி கூறினார். நாட்டின் முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமராக இருந்த அவரின் சாதனை மகத்தானது. அவரை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது என்றார். அரசியலானது சேவைக்கு திரும்புவதற்காகவும், மாற்றத்திற்காகவும் மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். மாற்றம் என்பது இப்போதே தொடங்குகிறது. புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கு உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும். உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும். அரசியல் என்பது மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கான சக்தி. அதை உங்களுக்கு காட்டுவோம். நாட்டுக்குதான் முதல் முன்னுரிமை. கட்சி இரண்டாம் பட்சம்தான். பாதுகாப்பற்ற உலக சூழிலில் சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறோம். மாற்றத்திற்கான பணி உடனடியாக தொடங்கும். பிரிட்டனை மீண்டும் கட்டியெழுப்புவோம். பொறுமை, அமைதியுடன் செயல்பட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. தேசத்தை பதுப்பிக்கும் பணியில் அனைவரும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கெயர் ஸ்டார்மர் கூறினார்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை