உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்: எதிர்கட்சிகள் கண்டனம் Kerala hospital collapse | Women died |Con

மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்: எதிர்கட்சிகள் கண்டனம் Kerala hospital collapse | Women died |Con

கேரளாவில் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2 தினங்களுக்கு முன் 68 ஆண்டு பழைய கட்டடம் இடிந்து விழுந்தது. ஒரு பெண் இறந்தார். சிறுமி உட்பட 2 பேர் காயமடைந்தனர். இதை கையில் எடுத்த எதிர்கட்சிகள் மாநிலத்தின் பல இடங்களில் அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி வருகின்றன. திருவனந்தபுரத்தில் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பாஜவினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். சுகாதார துறையின் மோசமான நிலையை கண்டித்து பத்தனம்திட்டாவில் காங்கிரசார் சவப்பெட்டி ஊர்வலம் நடத்தினர். மகளிர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் பாலக்காடு மாவட்ட மருத்துவமனை முன்பு அமைதி பேரணி நடத்தினர். பத்தனம்திட்டாவில், சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தொகுதி அலுவலகம் முன்பு பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முஸ்லீம் லீக்க்கும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தது. கொச்சி, கொல்லம், கன்னூர், மனந்தவாடி, கோழிக்கோடு முதலான நகரங்களிலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை