/ தினமலர் டிவி
/ பொது
/ கனகமலை வரை தொடர்பு? அதிர வைக்கும் தாயின் இரண்டாவது கணவர் | Kerala teen IS recruitment
கனகமலை வரை தொடர்பு? அதிர வைக்கும் தாயின் இரண்டாவது கணவர் | Kerala teen IS recruitment
கேரளா அதிக கல்வி அறிவு கொண்ட மாநிலமாக இருந்தபோதிலும் அங்கே தீவிரவாத நடவடிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து வரும் அதிகப்படியான பண பரிமாற்றம் மற்றும் வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இளைஞர்கள் அங்கே இருப்பது இதற்கு முக்கிய காரணம். அவர்கள் எளிதாகப் பன்னாட்டுத் தீவிரவாத அமைப்புகளால் குறிவைக்கப்படுகிறார்கள் என புலனாய்வு முகமை தெரிவிக்கிறது. அந்த வகையில் 16 வயது சிறுவன் தனது தாயால், ஐஎஸ்ஐஎஸ் தீவிர இயக்கத்தில் சேர சொல்லி மூளை சலவை செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.
நவ 20, 2025