கேரளாவில் நடந்த இரட்டையர் திருமணம்: ட்ரெண்டிங் ஆன ட்வின்ஸ் மேரேஜ் Kerala Twin Wedding |Twin Couples
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மகி, மரியா. வயது 31. திருவனந்தபுரத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இவர்கள், தங்களைப் போலவே இரட்டை சகோதரர்களை மணக்க விரும்பினர். வணிக கப்பலில் பணியாற்றும் சங்கனாச்சேரியைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் அகில் மற்றும் நிகில், வயது 32 ஆகியோரை பற்றிய தவகல் அறிந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணத் தேதியை முடிவு செய்தனர். கிறிஸ்தவர்களான இவர்கள், தங்கள் திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார்களும் இரட்டையர்களாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணினர். கோட்டயத்தில் உள்ள சர்ச்சியில் பாதிரியார்களாக இருக்கும் பென்டோ, பேஜோ ஆகியோரும் இரட்டையர்கள் என்பதை அறிந்து, அவர்களையே திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. சங்கனாச்சேரியில் நடந்த திருமண சடங்கின் போது பாதிரியார்களுக்கு உதவும், ஆல்டர் பாய்ஸ்களான ஜெரோன் மற்றும் ஜோஹன் ஆகியோரும் இரட்டையர்களாக அமைந்தது திருமணத்திற்கு வந்தவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரே திருமண நிகழ்ச்சியில், நான்கு இரட்டையர்களை பார்த்த திருமணத்திற்கு வந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திருமண வீடியோ சோசியல் மீடியாக்களில் பரவி, கேரளா மட்டுமின்றி, இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆகியுள்ளது. #Kerala #TwinWedding #TwinCouples #DoubleWedding #ViralWedding #Trending #UniqueWedding #IndianWedding #TwinBrothers #TwinSisters #WeddingGoals #ViralNews #KeralaNews #TamilNews #AmazingStory