உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அக்கா கண் முன்னே தங்கையை தூக்கிய போதை வாலிபர் | 10 year girl | kidnapping attempt | drunken youth |

அக்கா கண் முன்னே தங்கையை தூக்கிய போதை வாலிபர் | 10 year girl | kidnapping attempt | drunken youth |

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சாக்கோட்டை நீடாமங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ், வயது 32. அங்குள்ள ஹோட்டல் ஒன்றில், தனது அக்காவுடன் டிபன் வாங்க வந்த 10 வயது சிறுமியை வாயை பொத்தி தூக்கி சென்றுள்ளார். கடைக்குள் டிபன் வாங்கிக்கொண்டிருந்த சிறுமியின் அக்கா, இதை பார்த்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், முத்துராஜை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர். மது போதையில் இருந்த முத்துராஜூக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர். பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 10 வயது சிறுமியை போதை வாலிபர் வாயை பொத்தி தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ