முஸ்லிம்கள் வாழ்வு சிறக்கும்: போர்டல் பற்றி கிரண் ரிஜிஜு சொன்னது|Kiran Rijiju|Umeed Portal
வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, வக்பு சொத்துக்கள் குறித்த வெளிப்படைதன்மையை உறுதி செய்யும் வகையில், உமீத் என்ற பெயரில் ஆன்லைன் போர்டல் துவங்கப்பட்டுள்ளது. வக்பு சாெத்துக்கள் குறித்த விவரங்கள் பதிவேற்றம், சரிபார்ப்பு, நிர்வகிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை கவனிப்பதற்காக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் இந்த போர்டலை உருவாக்கிஉள்ளது. Unified waqf Management Empowerment Efficiency and Development என்பதன் சுருக்கமாக, UMEED என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கிய புதிய போர்டல் குறித்து, மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்ட் இரு சபைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து விடிய விடிய விவாதம் நடந்தது. பல நுணுக்கமான அம்சங்கள் குறித்து விவாதித்த பின், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்றது. இன்று அதற்கான டிஜிட்டல் வடிவம் தரப்பட்டுள்ளது. புதிய போர்டல் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வக்பு வாரிய சாெத்துக்களை நிர்வகிப்பது வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும்.