தண்டனை அறிவிக்கும் முன் கதறிய அரக்கன் சஞ்சய் ராய் kolkata doctor case judgment | CBI vs Sanjay Roy
கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. கொடூர காரியத்தை செய்த சஞ்சய் ராய் என்ற அரக்கன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கொல்கத்தா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நாடே உற்று நோக்கிய டாக்டர் வழக்கு விசாரணை முடிவில், சஞ்சய் ராய் குற்றவாளி என்று கொல்கத்தா கோர்ட் அறிவித்தது. தீர்ப்பு விவரத்தை இன்று சொல்வதாக ஏற்கனவே நீதிபதி அனிர்பன் தாஸ் கூறி இருந்தார். அதன்படி இன்று நீதிபதி முன்பு குற்றவாளி சஞ்சய் ராய் ஆஜர்படுத்தப்பட்டான். கடைசி விசாரணையின் போது, தான் இந்த சம்பவத்தை செய்யவில்லை. உயர் அதிகாரி ஒருத்தருக்கு தான் இதில் தொடர்புள்ளது. நான் அப்பாவி என்று கூறி இருந்தான். அன்று, தீர்ப்பு நாளில் பேச அனுமதி தருவதாக சஞ்சய் ராயிடம் நீதிபதி கூறி இருந்தார். அதன்படி, இன்று கோர்ட் நடவடிக்கை ஆரம்பித்ததும், தண்டனை பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று சஞ்சய் ராயிடம் நீதிபதி கேட்டார். உடனே அவன் நயவஞ்சகமாக என்னை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டனர் என்றான். அவன் கூறியது: எந்த காரணமும் இன்றி என்னை இந்த வழக்கில் மாட்டி விட்டுள்ளனர். ஏற்கனவே தங்களிடம் கூறி இருக்கிறேன். நான் ருத்ராட்சம் அணிந்துள்ளேன். நான் தான் குற்றவாளி என்றால் சம்பவம் நடந்தபோது, ஸ்பாட்டில் எனது ருத்ராட்சம் மாலை உடைந்திருக்க வேண்டும். உண்மையில் நான் அப்பாவி. என்னை பேசவே விடவில்லை. வலுக்கட்டாயமாக நிறைய பேப்பரில் கையெழுத்து போட சொன்னார்கள். ஒரு முறை கூட என் வாயை திறக்க அனுமதிக்கவில்லை.