உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் டாக்டர் சம்பவம் விசாரிக்கும் CBI சிங்கப்பெண்கள் | kolkata woman doctor case | CBI Meena | Seema

பெண் டாக்டர் சம்பவம் விசாரிக்கும் CBI சிங்கப்பெண்கள் | kolkata woman doctor case | CBI Meena | Seema

கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. சஞ்சய் ராய் என்பவனை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். லோக்கல் போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லாததால், வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. இப்போது சிபிஐ தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் திறமையான அதிகாரிகளை சிபிஐ களம் இறக்கியது. குறிப்பாக, சிபிஐ விசாரணை குழுவின் லீடரும், கள விசாரணை அதிகாரியும் பெண்கள். ஒருவர் பெயர் சம்பத் மீனா; இன்னொருத்தர் சீமா பகுஜா. இவர்கள் பற்றி இப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்கத்தா டாக்டர் சம்பவத்தை விசாரிக்கும் 25 பேரை கொண்ட விசாரணை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பவர் சம்பத் மீனா. இவர் சிபிஐயின் மூத்த பெண் அதிகாரி. கூடுதல் இயக்குனராக பதவி வகித்து வருகிறார். 1994ம் ஆண்டு ஜார்கண்டில் இருந்து ஐபிஎஸ் ஆனார். கொல்கத்தா சம்பவம் போலவே 2017 ல் நாட்டை உலுக்கியது உன்னாவ் பாலியில் பலாத்காரம் வழக்கு;

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ