உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீர்ப்பில் நீதிபதி சொன்ன முக்கிய குறிப்பு | kolkata woman doctor case judgment | CBI vs Sanjay Roy

தீர்ப்பில் நீதிபதி சொன்ன முக்கிய குறிப்பு | kolkata woman doctor case judgment | CBI vs Sanjay Roy

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த 31 வயதான பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்தது. சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கொல்கத்தா போலீசில் தன்னார்வலராக வேலை பார்த்தான். அடிக்கடி ஆர்ஜி கர் மருத்துவமனையில் அவனுக்கு பணி வழங்கப்பட்டது. இதனால் மருத்துவமனையின் அனைத்து இடங்களும் அவனுக்கு அத்துப்படி. சம்பவத்தன்று மருத்துவமனை செமினார் ஹாலில் பயிற்சி டாக்டர் ஓய்வெடுத்தார். அவர் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை தாக்கி பலாத்காரம் செய்தான். பின்னர் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பினான். பின்னர் கொல்கத்தா போலீசிடம் சிக்கினான். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சஞ்சய் ராய் ஒற்றை ஆளாக இந்த கொடூரத்தை செய்ததை சிபிஐ உறுதி செய்தது. சஞ்சய் ராய் மீது கொல்கத்தா சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிர்பன் தாஸ் சஞ்சய் ராய் குற்றவாளி என்று 2 நாள் முன்பு தீர்ப்பளித்தார். இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார். இதையொட்டி சஞ்சய் ராய் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனுக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனையை சாகும் வரை சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட பயிற்சி டாக்டர் குடும்பத்துக்கு மேற்கு வங்க அரசு 17 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். ஆனால் இந்த நிவாரணத்தை பெண் டாக்டர் குடும்பம் நிராகரித்து விட்டது. முன்னதாக சஞ்சய் ராய்க்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியது. இது அரிதிலும் அரிதான வழக்கு. பாதிக்கப்பட்டது மெரிட்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சி டாக்டர். டாக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் என்ன சொல்வது?

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ