உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா சம்பவம்போல ம.பி. டாக்டருக்கு சோகம் RG Kar medical college hospital doctor case Junior

கொல்கத்தா சம்பவம்போல ம.பி. டாக்டருக்கு சோகம் RG Kar medical college hospital doctor case Junior

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 வயது பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி நாடு முழுக்க டாக்டர்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. மத்திய அரசு உறுதியளித்ததன் பேரில் டாக்டர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கொல்கத்தாவைப்போல, மத்தியப்பிரதேசத்திலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை சீரழித்த காமுகனை போலீசார் கைது செய்தபோது ஒட்டுமொத்த மருத்துவமனையும் அதிர்ச்சியடைந்தது. குவாலியர் நகரில் கஜ்ரா ராஜா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு, ஜூனியர் டாக்டராக இருக்கும் 25 வயது பெண், அரசு பணி தேர்வுக்காக தயாராகி வந்தார். தேர்வுக்காக மருத்துவக்கல்லூரி மாணவிகள் ஹாஸ்டலில் தங்கியிருந்தார். அவருடன் ஒன்றாக எம்பிபிஎஸ் படித்து டாக்டரான நண்பரும் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்தார். நேற்று பெண் டாக்டருக்கு போன் செய்து, ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும்; உடனே ஜென்ட்ஸ் ஹாஸ்டலுக்கு வா என்றார்.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை