அப்பாவின் ஆசையை நிறைவேற்ற இரவோடு இரவாக நடந்த திருமணம்
கிருஷ்ணகிரி, மத்தூர் அருகே பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி வரதராஜ். வயது 60 இவரது மனைவி மஞ்சுளா. இவர்களின் மூத்த மகன் மணீஷுக்கும், பர்கூரை சேர்ந்த பிரியாவுக்கும் திருமணம் முடிவானது. மகன் திருமணத்திற்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் பார்த்து பார்த்து செய்து வந்தார் வரதராஜ். ஞயிறன்று இரவு நிச்சயதார்த்தம் நடந்தது. விடிந்தால் திருமணம். பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்த வரதராஜ் திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.
மார் 11, 2025