கிருஷ்ணகிரி கொடூரம் முன் சிவராமன் செய்த சேட்டை | krishnagiri school case | NTK Sivaraman | NCC camp
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திக்குப்பம் தனியார் பள்ளியில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டுள்ளது. என்சிசி மாஸ்டர் என்ற பெயரில் காவேரிபட்டினத்தை சேர்ந்த சிவராமன் என்பவன் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டான். முகாம் நடத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக சொன்னான். பள்ளி நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை முகாம் நடந்தது. 17 மாணவிகள் பங்கேற்றனர். முகாம் நடந்த நாட்களில் பள்ளிக்கூடத்திலேயே தங்கினர். கடைசி நாள் இரவில் மாணவிகள் தூங்கிக்கொண்டு இருந்த அறைக்கு சிவராமன் சென்றான். 13 வயதான 8ம் வகுப்பு மாணவியை எழுப்பி வெளியே அழைத்து சென்றான். மாணவியை மிரட்டி பலவந்தமாக பாலியல் தொல்லை கொடுத்தான். இந்த கொடுமையை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டினான். சில நாட்களில் மாணவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் சொல்லி அழுதாள். அதன் பிறகு தான் இந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் சிவராமனை கைது செய்தனர்.