தனிமையில் காதலர்கள்... சிறுவன் கதை முடித்த பகீர் பின்னணி krishnagiri boy case | anchetty crime news
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த மாவனட்டியை சேர்ந்தவர் சிவராஜ் வயது 40. சென்ட்ரிங் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மஞ்சுளா. தம்பதிக்கு 2 மகன்கள்; ஒரு மகள். 13 வயதான மகன் ரோகித் என்ற மோடி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். புதன்கிழமை கிரிக்கெட் விளையாட போகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டில் இருந்து கிளம்பினான். பின்னர் வீடு திரும்பவில்லை. இருட்ட ஆரம்பித்தும் மகன் வராததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோரும் ஊர் மக்களும் ரோகித்தை தேடினர். இரவு 8 மணி ஆகியும் அவன் கிடைக்கவில்லை. இதனால் பயந்து போன ஊர் மக்கள் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் போதிய வேகம் காட்டவில்லை. இதற்கிடையே பக்கத்து ஊரில் உள்ள உறவினர்களிடம் ஊர் மக்கள் போன் போட்டு விசாரித்தனர். அப்போது அஞ்செட்டியை சேர்ந்த உறவினர் ஒருவர், தான் ரோகித்தை மாலையில் பார்த்ததாக சொன்னார். ‛அவன் ஒரு காரில் செல்வதை பார்த்தேன். முன் பக்கத்தில் ரோகித்தும் டிரைவரும் இருந்தனர். பின்னால் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் இருந்தனர் என்று அவர் சொன்னார். அந்த இளைஞனுக்கும் இளம்பெண்ணுக்கும் மாவனட்டி தான். அவர்கள் யார் என்பதையும் அந்த உறவினர் சொன்னார். இதற்கிடையே தனது நண்பர்கள் 2 பேருடன் ரோகித் கிரிக்கெட் கிரவுன்ட்டுக்கு போகும் சிசிடிவி காட்சி கிடைத்தது. அதை வைத்து அந்த சிறுவர்களிடம் ஊர் மக்கள் சிலர் விசாரித்தனர். அப்போது உறவினர் சொன்ன அதே இளைஞன் பெயரை சிறுவர்களும் கூறினர்.