உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கும்பமேளா கூட்டத்தால் 300KM டிராபிக் ஜாம்-திடுக் வீடியோ | Kumbh mela traffic jam | UP traffic

கும்பமேளா கூட்டத்தால் 300KM டிராபிக் ஜாம்-திடுக் வீடியோ | Kumbh mela traffic jam | UP traffic

உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் மிரள விட்ட கும்பமேளா கூட்டம்! 300KM ஸ்தம்பித்தது பரபரப்பு காட்சிகள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராட பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அணிவகுக்கின்றனர். இது தான் உலகின் மிகப்பெரிய ஆன்மிக மற்றும் கலாச்சார நிகழ்வாகும். விடுமுறை நாளான நேற்று ஒரே நாளில் 1.57 கோடி பக்தா்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினா். கும்பமேளா துவங்கி இதுவரை 43.57 கோடி பக்தா்கள் புனித நீராடி உள்ளனா். தொடர்ந்து பல லட்சம் மக்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுப்பதால், உத்தரப்பிரதேசத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை போக்குவரத்து நெரிசல் உச்சம் தொட்டது. மத்தியப்பிரதேசம் வரை எதிரொலித்தது. அதாவது, 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறதாம். கிட்டத்தட்ட திருநெல்வேலி டு திருச்சி செல்லும் தூரம். இவ்வளவு பெரிய நெரிசலை உலகம் பார்த்து இருக்காது. இது தான் உலகின் பெரிய டிராபிக் ஜாம் என்று நெரிசலில் சிக்கி தவிப்பவர்கள் கூறுகின்றனர். Breath இது பற்றி போலீசார் கூறுகையில் சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் வந்தனர். இதுதான் டிராபிக் ஜாமுக்கு முக்கிய காரணம். இந்த டிராபிக் ஜாமை உடனடியாக சரி செய்ய முடியாது. இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அதிர வைத்தனர். அதே நேரம் உத்தரப்பிரதேசம் அரசாங்கத்தின் நிர்வாக தோல்வி தான் இதற்கு காரணம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். டிராபிக்கில் சிக்கியவர்கள் 45 மணி நேரமாக ஊர்ந்து வருகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் தவிக்கின்றனர். சாப்பிட, தண்ணீர் குடிக்க வழி இல்லை. உதவ யாரும் இல்லை. இயற்கை உபாதைக்கு இடம் இல்லை. மருத்துவமனைக்கும் போக முடியாது. இவ்வளவு பெரிய பிரச்னைக்கு அரசின் நிர்வாக திறமை தான் காரணம் என்று சாடி உள்ளார்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ