உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகா கும்பமேளா: உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழா ஆரம்பம் | Kumbh Mela | Maha kumbh mela

மகா கும்பமேளா: உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழா ஆரம்பம் | Kumbh Mela | Maha kumbh mela

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று துவங்கி பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் நடக்க உள்ளது. 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்களும், துறவிகளும் மஹா கும்பமேளா தினத்தில் கங்கையில் புனித நீராட உள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சேரும் திரிவேணி சங்கமம் தான் பிரயாக்ராஜ் பகுதி. இங்கு நீராடுவதால் பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வழக்கமாக கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. இப்போது நடக்கும் கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ