உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேனி குரங்கணி அருவி நீரோடையில் சிக்கிய குடும்பம் | Kurangani | theni

தேனி குரங்கணி அருவி நீரோடையில் சிக்கிய குடும்பம் | Kurangani | theni

தேனி, போடிநாயக்கனூரில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது குரங்கணி அருவி நீரோடை. தமிழக கேரள எல்லை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் பார்க்க ரம்மியமாக இருக்கும். ஆனால் கனமழை காலங்களில் எதிர்பாராத நேரத்தில் திடீரென வெள்ளபெருக்கு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் நீரோடையில் இறங்க வனத்துறை தடை விதித்துள்ளது. எச்சரிக்கை மீறி ஒரு சிலர் குடும்பத்துடன் வந்து ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். போடி மேலத்தெரு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜஹாங்கீர் ஞாயிறன்று தனது குடும்பத்துடன் நீரோடைக்கு சென்றார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் நீரோடையில் இறங்கி குளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் திடீரென நீர் மட்டம் உயர ஆரம்பித்தது. கரைக்கு அருகில் நின்று குளித்த 5 பேர் அவசர அவசரமாக வெளியேறி கரைக்கு வந்துவிட்டனர். ஆழமான இடத்தில் குளித்த ஜஹாங்கீர், அவரது உறவினர் மஜீத் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இரவு முழுவதும் தேடியும் அவர்களை மீட்க முடியவில்லை. தீயணைப்பு படையினர் இரண்டாவது நாளாக தேடினர். அதிகாலை அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். குரங்கணி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பலர் ஆபத்தை உணரமால் இங்கு வந்து இறந்துள்ள நிலையில் வனத்துறை கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்கின்றனர் ஆர்வலர்கள்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை