தமிழகத்தில் பெரு மழை கொட்ட வாய்ப்பு? பசிபிக் கடலில் தெரிந்த மாற்றம் | La Nina | Northeast monsoon
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, வரும், 16 முதல், 18ம் தேதிக்குள் துவங்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதிக கனமழை பெய்தால், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதுவும் இந்த ஆண்டு வழக்கத்தை விட, கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின் வங்கக்கடலில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பசிபிக் பெருங்கடலில் ஏற்படும், லா நினா நிகழ்வின் தாக்கமும், தமிழக கடலோர மாவட்டங்களில், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலையின், காலநிலை மாற்றம் பேரிடர் மேலாண்மை மையம் சில கணிப்புகளை வெளியிட்டுள்ளது. பொதுவாக, பசிபிக் பெருங்கடலில், மத்திய மற்றும் கிழக்கு பூமத்தியரேகை பகுதியில், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட குளிர்ந்து காணப்படுவது, லா நினா நிகழ்வு என கூறப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் இந்நிகழ்வு ஏற்பட்டாலும், அதன் தாக்கம், பல்வேறு பகுதிகளில் எதிரொலிக்கும். பசிபிக் பெருங்கடலில், இந்த ஆண்டு காணப்படும் லா நினா நிகழ்வால், வறண்ட காற்று மேற்கு நோக்கி வீசும். பருவக்காற்று இந்தக் காற்று ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா நாடுகளை கடந்து, வங்கக்கடல் வரை வர வாய்ப்பு உள்ளது.