பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய கவர்னர்
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற உள்ள தமிழகத்தை சேர்ந்த நபர்களுக்கு கவர்னர் ரவி பாராட்டு விழா நடத்தினார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கவர்னர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். ஒவ்வொருவரின் சேவையையும் பாராட்டி பேசினார். பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள தினமலர் நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பற்றி பேசிய கவர்னர் ரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வணிக நோக்கத்திற்காக இல்லாமல், நீதிநெறிக்குட்பட்டு பத்திரிகை தர்மத்தை கடைபிடித்து, மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடன் தினமலர் பத்திரிக்கையை நடத்தி வருவதாக பாராட்டினார்.