தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் பெருமிதம் | Latchiya aasiriyar award | Dinamalar |
தினமலர் பதிப்பு சார்பில் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது வழங்குவது போல் ஒவ்வொரு ஆண்டும் தினமலர் நாளிதழ் சார்பில் லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். புதுச்சேரி தினமலர் பதிப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதுக்கு ஆகஸ்ட் 5 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன.