உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காற்றில் பரவும் ஆட்கொல்லி: அறிகுறிகள் என்ன? | legionnaires | Australia

காற்றில் பரவும் ஆட்கொல்லி: அறிகுறிகள் என்ன? | legionnaires | Australia

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதிய வகை நிமோனியா தொற்று பரவி வருகிறது. 5 பேருக்கு லெஜியோனெல்லா (legionnaires) எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது. லெஜியோனெல்லா பாக்டீரியா கொண்ட நீர் துளிகளை சுவாசிக்கும் போதோ அல்லது இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தாலோ நுரையீரல் தொற்று ஏற்படும். அசுத்தமான நீர், அசுத்தமான ஏசிகளில் இருந்து இந்த பாக்டீரியா உருவாகி தாக்குவதாக வல்லுநர்கள் சொல்கின்றனர். இப்போது தொற்று பாதிக்கப்பட்ட 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரையிலான காலக்கட்டத்தில் நோய் அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று பரவியதற்கான மூலக்காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கடந்த 1976ல் அமெரிக்க ராணுவத்தின் படை பிரிவு வீரர்களிடையே லெஜியோனெல்லா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியாக்கல் மனித உடம்பினுள் சென்ற 2 முதல் 10 நாட்களுக்குள் தலைவலி

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை