/ தினமலர் டிவி
/ பொது
/ 2 ஆண்டுகளாக ஆட்டம் காட்டிய சிறுத்தை சிக்கியது! | leopard | leopard trapped | Krishnagiri
2 ஆண்டுகளாக ஆட்டம் காட்டிய சிறுத்தை சிக்கியது! | leopard | leopard trapped | Krishnagiri
ஒரே ஒரு உறுமல்! ஆடி போன கூட்டம் கூண்டுக்குள்ளும் அடங்காத ஆவேசம் தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம், இஸ்லாம்பூர், தண்டரை உள்ளிட்ட கிராம மக்களை ஆண் சிறுத்தை ஒன்று அச்சுறுத்தி வந்தது. பாறை இடுக்குகளில் பதுங்கி மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் தெரு நாய்களை வேட்டையாடியது. வனத்துறை சார்பில் கூண்டு வைத்தனர். இரண்டு ஆண்டுகளாக போக்கு காட்டிய சிறுத்தை 30க்கும் அதிகமான ஆடுகள் மற்றும் தெருநாய்களை கொன்றது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை எடுத்தனர். இன்று காலை வனத்துறையினர் ரோந்து சென்ற போது கூண்டில் சிறுத்தை சிக்கி இருந்தது.
ஜன 02, 2025