அண்ணிகளுடன் தொடர்பு: அரசு ஊழியருக்கு சோக முடிவு | illegal relationship mayiladuthurai | love affair
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி தாலுகா
பெரிய குத்தவக்கரை
வீரனார் கோவில் பகுதியை
சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.
இவரது மகன் லட்சுமணன்.35.
சீர்காழி ஊராட்சி
ஒன்றிய அலுவலகத்தில்
தற்காலிக பணியாளராக
வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி
அஞ்சலி என்ற மனைவியும்,
2 மகள்களும் உள்ளனர்.
லட்சுமணன் ஆணைக்காரன் சத்திரத்தில் வசிக்கும் தனது பெற்றோரை
அடிக்கடி பார்க்கச்செல்வது வழக்கம்.
அப்போது,
பெற்றோர் வீட்டின் அருகே வசிக்கும் பெரியப்பா மகன் ராஜா என்ற
ராமச்சந்திரன் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
ராமச்சந்திரனுக்கு சசிகலா, சத்தியரசி
என 2 மனைவிகள் உள்ளனர்.
அடிக்கடி ராமச்சந்திரன்
வீட்டுக்கு சென்று வந்த நிலையில்,
சசிகலா, சத்தியரசி 2 பேருடனும் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ராமச்சந்திரன் 2 மனைவிகள் வீட்டிலும்
இரண்டிரண்டு நாள் இருப்பாராம்.
அதை பயன்படுத்தி இருவருடனும்
லட்சுமணன் தொடர்பில் இருந்துள்ளார்.
இது, ராமச்சந்திரனுக்கு தெரியவந்ததும்
மனைவிகளை கடுமையாக கண்டித்தார்.
லட்சுமணனின் காதல் விளையாட்டு பற்றி சமீபத்தில்தான் ராமச்சந்திரனுக்கு
தெரிய வந்தது.
அன்று முதல் லட்சுமணன் மீது
கடும் கோபத்தில் இருந்தார்.
ராமச்சந்திரன் அதிமுக பிரமுகர்.
அரசியல் செல்வாக்கு அதிகம்.
ராமச்சந்திரனால் லட்சுமணன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பெற்றோர் அஞ்சினர்.
கொஞ்ச நாள் கண்காணாத
இடத்துக்கு போய் விடு என
பெற்றோர் எச்சரித்தனர்.
இதனால் லட்சுமணன் சென்னைக்கு
சென்றார். ஆவடியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த விஷயம் ராமச்சந்திரனுக்கு தெரியவந்தது.
உறவினர் ராகுல் உள்ளிட்ட
4 பேர் நேற்று
சென்னைக்கு சென்றனர்.