/ தினமலர் டிவி
/ பொது
/ வேலை வாய்ப்பை உறுதி செய்ய மனு அளித்த பாரம் தூக்கும் தொழிலாளர்கள்! Loadman | Sub Collector Office |
வேலை வாய்ப்பை உறுதி செய்ய மனு அளித்த பாரம் தூக்கும் தொழிலாளர்கள்! Loadman | Sub Collector Office |
பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, ராஜா மில் ரோடு, கோட்டூர் ரோடு, சந்தைப்பேட்டை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள், குடோன்கள் உள்ளன. அங்கு வரும் வாகனங்களில் சரக்குகளை ஏற்றி இறக்க பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பாரம் தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜா மில் ரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சரக்குகளை ஏற்றி இறக்க சில நிறுவனங்கள் தற்போது வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொள்ளாச்சி பாரம் தூக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மே 19, 2025